கோவை திமுக பிரமுகர் பெயரில் போலி முகநூல் கணக்கு... நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்..!

கோவை: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினரான குறிச்சி பிரபாகரன், தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட்டு தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கோவை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினரான குறிச்சி பிரபாகரன், தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட்டு தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கோவை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.



குறிச்சி பிரபாகரன் அளித்துள்ள புகார் மனுவில், ‘‘வணக்கம்‌. நான்‌ தற்போது கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன்‌. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்‌ கிணத்துக்கடவு தொகுதியில்‌ திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள்‌ வித்தியாசத்தில்‌ வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன்‌. நான்‌ முன்னாள்‌ குறிச்சி நகராட்சி தலைவராகவும்‌, குறிச்சி பகுதி திமுக செயலாளராகவும்‌ இருந்து மக்கள்‌ பணியாற்றி உள்ளேன்‌.



இந்தநிலையில்‌ கடந்த 29-06-2021 அன்று எனது முகநூல்‌ பக்கம்‌ போன்று ஒரு போலியான முகநூல்‌ பக்கம்‌ உருவாக்கப்பட்டு அதன்‌ மூலம்‌ எனது நண்பர்கள்‌ போத்தனூரைச்‌ சேர்ந்த திரு. சிவா 9566353069, திரு. விக்னேஷ்‌ 9790601047, மாச்சம்பாளையத்தை சேர்ந்த மதன்‌ 994272344, மற்றும்‌ குறிச்சியை சேர்ந்த திரு. பிரபு 9840159649 ஆகிய நான்கு பேரின்‌ எண்ணிற்கும்‌ பேஸ்புக்‌ மெசஞ்சரில்‌ குறுஞ்செய்தி அனுப்பி, நான்‌ கேட்பதுபோல்‌ பணம்‌ கேட்கப்பட்டுள்ளது.



அவர்கள்‌ என்னை நன்கு அறிந்ததால்‌, இந்த தகவல்‌ எனக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும்‌, இதுபோல்‌ எத்தனை பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என்ற விவரம்‌ தெரியவில்லை. இத்துடன்‌ இதன்‌ விபர நகல்கள்‌ இணைக்கப்பட்டுள்ளது.

பொதுவாழ்வில்‌ உள்ள எனது பெயருக்கு களங்கம்‌ ஏற்படுத்தும்‌ வகையில்‌ எனது பெயரில்‌ போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து இதுபோல்‌ பணம்‌ பறிக்கும்‌ வேளையில்‌ ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து தக்க சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌'' என்று புகாரளித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...