கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் மதுராந்தகி. இவர் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தார். பிறகு முன்னாள் அமைச்சரின் ஆதரவோடு மாநகராட்சி துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில், அவர் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த விமல்ராஜ் கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.