அண்மையில் பெய்து வரும் பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் 24.40 அடியாக உயர்வு..!

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் பருமழையின் காரணமாக கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் பருமழையின் காரணமாக கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள இந்த சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் இந்த அணையில் 45 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து 878 மீட்டர் உயரத்தில் இந்த அணை உள்ளது. இந்த அணையில் 650 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்கலாம்.

தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த சில நாட்களாக வால்பாறை, ஆழியாறு, சின்கோனா, மாநகர் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் நன்றாக உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 24.40 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஜூன் மாதம் 25 அடி வரை உயர்ந்து பின் 20 அடி வரை நீர்மட்டம் சரிந்தது. தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.

தற்போது அணையில் இருந்து மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக தினமும் 101 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...