கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

கோவையில் மேற்குபுறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் மேற்குபுறவழிச்சாலை அமைக்க 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக, 16 கிராமங்களில் இருந்து,

355 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்டமாக 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

இதற்காக, 5 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 120 பேரிடம் இருந்து 30 ஏக்கர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை-பாலக்காடு சாலையில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வந்துதான் தற்போது செல்ல வேண்டியது உள்ளது. இதன்காரணமாக மாநகரில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதேபோல், ஊட்டியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் மாநகருக்குள் வருகின்றது. இதனை தவிர்க்கும் வகையில் கோவை மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை கட்டுமான பணி, 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதில், முதற்கட்டமாக கோவை-பாலக்காடு சாலையில் மைல்கல் பகுதியில் ஆரம்பித்து பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இதுவரை 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 120 பேருக்கு ரூ.35 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேலும் 40 பேருக்கு ரூ.5 கோடி இழப்பீடு விரைவில் வழங்கப்படும்.

இதனை அடுத்து சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், பன்னிமடை வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து நஞ்சுண்டாபுரம், குரும்பபாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் கட்டமாகவும் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...