கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 100 சிறப்பு ஐசியு படுக்கைகள் தயார்..!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என 100 ஐசியூ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என 100 ஐசியூ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது;

நம் எல்லோருடைய விருப்பமும், மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான். ஒருவேளை வந்தால், அதை தடுக்க மருத்துவர்கள்

தயாராக உள்ளனர். தற்போது, 18 வயது முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், குழந்தைகளுக்கு என 170 படுக்கைகள் தயாராக உள்ளன.

குறிப்பாக அதில், 100 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டது. மூன்றாவது அலை வந்தால் நோயின் வீரியம் அதிகமாக இருக்கும். அதை தடுக்கும் பொறுப்பு, பொதுமக்களுக்கு தான் அதிகம் உள்ளது. காரணம் மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தடுப்பு முறைகளை பின்பற்றி, முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...