கோவை: கோவை அருகே லாரி மோதிய விபத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக பலியானார்.

கோவை அருகே லாரி மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் பலியானார். மகளுக்கு பள்ளியில் கட்டணம் செலுத்திவிட்டு திரும்பியபோது இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- “கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர், கிருஷ்ணா நகர், பகுதியைச் சேர்ந்தவர் பிரபு வயது 33, இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஹேமப்பிரியா 28, இவர்களுக்கு தன்வி(4), என்ற மகள் உள்ளார்.
இந்தநிலையில், பிரபு தனது மகளை கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள ஒரு இண்டர்நேஷனல் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதற்காக நேற்று கல்விக்கட்டணம் செலுத்த பள்ளிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் கட்டணத்தை கட்டி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அவர் கணுவாயிலிருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பின்னால் வந்த லாரி பிரபு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் லாரி மோதி கல்லூரி பேராசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.