கோவையில் சொத்து தகராறில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்..!

கோவை: கோவை அன்னூர் அருகே நிலத்தகராறில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்ததில் காயம் அடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை அன்னூர் அருகே நிலத்தகராறில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்ததில், காயம் அடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் சந்தோஷ் வயது 25, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமியின் மகன் ரஞ்சித் குமார் 26, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று சந்தோஷ் பிரச்சனைக்குரிய நிலத்தின் வழியாக சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கண்ட ரஞ்சித்குமார் சந்தோசை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...