கோவை: வால்பாறையில் ஊரடங்கு தளர்வின் காரணமாக மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கொரானா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழக அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. வால்பாறை பகுதியில் வால்பாறையில் இரண்டு கடைகளும், ரொட்டிக்கடை முடீஸ் மற்றும் சோலையார் அணைப் பகுதிகளில் கடைகள் உள்ளன.
இந்த நிலையில், இன்று தமிழக அரசு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்தை தொடர்ந்து கடை ஊழியர்கள் காலையில் கடையை சுத்தம் செய்து தீபாராதனை காட்டி விற்பனையை துவக்கினர்.
கடைகளில் தடுப்பு வேலிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்களும் போடப்பட்டுள்ளன காலை 10 மணி முதல் குடிமகன்கள் கடைக்கு வந்து மது பாட்டில்களை சந்தோசமாக வாங்கி சென்றனர்.

ஒவ்வொரு கடைக்கும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பின் மதுக்கடைகள் திறந்தது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.