கோவை கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் திறப்பு..! குறைந்த விலை மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப் பிரியர்கள் சோகம்!

கோவை: கோவை கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், குறைந்த விலை மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப் பிரியர்கள் சோகமடைந்தனர்.



கோவை: கோவை கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், குறைந்த விலை மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப் பிரியர்கள் சோகமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 7 டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.



டாஸ்மாக் கடை திறப்பால் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுப் பிரியர்கள் வராததால் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது



இந்த நிலையில், ஒரு சில பேர் மட்டுமே மது வாங்க வந்தவர்கள் குறைந்த விலையான மதுபானங்கள் இல்லாததால் வாங்காமல் திரும்பிச் சென்றனர்.



இருப்பினும், டாஸ்மாக் கடைக்கு வருபவர்களுக்கு சானிடைசர் கைகளில் தெளிக்கப்பட்ட பின்னரே மதுபானங்கள் வழங்கப்பட்டது.



இரண்டு மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில், மதுபானங்கள் இருப்பு இல்லாத காரணத்தாலும், அதிக விலையுடைய மதுபானங்கள் மட்டுமே இருப்பதால் மது விற்பனை மத்தமாகவே காணப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...