கோவை: கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று திறக்கப்பட்டது.
கோவை: கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று திறக்கப்பட்டது.
பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து, ‘பன் ரிபப்ளிக் மால்', மேலாளர், ராமகிருஷ்ணன், ‘‘கோவை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
மால் வளாகத்தில் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் மிகவும் பாதுகாப்பான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க மாலுக்கு வருகை தரலாம். வளாகத்தில் அமைந்துள்ள சினிமா தியேட்டர்கள் மட்டும் அரசு உத்தரவின் காரணமாக செயல்படாது. மற்றபடி ‘புட் கோர்ட்' மற்றும் கடைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்.
வணிக வளாகத்துக்கு வருகை தரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை தானியங்கி முறையில் மேற்கொள்ள நவீன கருவிகள் நுழைவாயில் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.
தவிர, வாடிக்கையாளர்கள் விவரங்கள் பதிவேட்டில் தெரிவித்து அதை பதிவு செய்தபின் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மால் வளாகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று முதல் மீண்டும் மால் திறக்கப்பட்டுள்ள செய்தி மக்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்று கூறினார்.