கோவை: கோவை மாநகராட்சி சுகாதார மையங்களில் இதுவரை நான்கு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பகாலத்தில் அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்தது. பின்னர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்திருந்தது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிக்கும் முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி சுகாதார நிலையங்களின் மூலம் மட்டும் தற்போது வரை நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினர்.