கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மகன் இறந்ததைத் தாங்கிக்கொள்ள இயலாத முதியவரான தந்தை விரக்தியில், விஷம் குடித்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி பழனியப்பன் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி வயது 82. இவருக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அய்யாசாமியின் இரண்டாவது மகன் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில், அய்யாசாமி கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று, விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.