கோவையில் திருமணமான ஐந்து வருடத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு!

கோவை: திருமணமான ஐந்து வருடத்தில் பெண் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: திருமணமான ஐந்து வருடத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த துடியலூர் நேருவீதியைச் சேர்ந்தவர் சபீர். இவர் ஒரு வியாபாரி ஆவார். இவருடைய மனைவி சபானா (23), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சபாவின் வீட்டுக்கு அவருடைய தந்தை முகமது கவுஸ் வந்தார்.

அப்போது, வீட்டில் இருந்தவர்கள் சபானா அறைக்குள் இருப்பதாக தெரிவித்தனர். அவரது அறைக்குச் சென்று திறக்க முயன்றார். கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தார். அப்பொழுது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதைப் பார்த்து அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சபானா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து துடியலூர் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...