உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள்..!

கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள் நடைபெற்றது.


கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள் நடைபெற்றது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு, வனத்துறை மூலமாக உலக புலிகள் தினத்தில் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், இணையவழி மூலம் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கு பெற பள்ளி மாணவர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வகுப்பு மற்றும் பள்ளி பெயருடன் அவர்கள் கலந்து கொண்ட போட்டியின் காணொளிக் காட்சியை இணையவழி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியப்போட்டி (drawing) (புலியின் வாழ்விடம்), முகச்சாயல் (face painting) (புலியின் உருவம்) போட்டி, பாடல் போட்டி (rhymes) (உங்கள் பார்வையில் புலி) ஆகியவையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (elecution) (வனத்தின் காவலன் புலி), முகச்சாயம் (புலியின் உருவம்), கவிதை போட்டி (புலியின் அழகு), கைவினைப் போட்டி (புலியின் உருவம்) ஆகியவையும், மேலும் 9 முதல் 10ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (நவீன உலகில் புலிகளின் பாதுகாப்பு), முகச்சாயல் (புலியின் உருவம்), கவிதைப்போட்டி (சங்க இலக்கியத்தில் புலி) கைவினை போட்டி (புலி உருவம்) போட்டி ஆகிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தாங்கள் பங்குபெறும் போட்டிகளின் காணொளியை இணையவழி மூலம் ஜூலை 1 முதல் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற இணைய வழி முகவரி அல்லது 9080775768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...