கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. லோட்டஸ் மருத்துவமனை CEO Dr. K. செல்வன் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.


Coimbatore: ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரியின் துணை சுகாதார அறிவியல் துறை சார்பில் இரண்டாம் பட்டமளிப்பு விழா 25 ஜூலை 2026 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கற்பகம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவில் 130 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு கற்பகம் மருத்துவக்கல்லூரி தாளாளரும், கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர். இரா. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். கற்பகம் மருத்துவக்கல்லூரி முதல்வர் Dr. K. சாந்தா அருள்மொழி தலைமையேற்றார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக லோட்டஸ் மருத்துவமனையின் குழுமத் தலைமை நிர்வாக அலுவலரும், குழந்தைகள் நல ஆலோசகருமான Dr. K. செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

தனது உரையில் Dr. செல்வன், "சுகாதாரத் துறையில் தொழில்முறை திறன், மனிதநேயம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. மாணவர்கள் தங்களது சேவையின் மூலம் சமூக நலனில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

துணை சுகாதார அறிவியல் துறை முதல்வர் M. நிர்மலாதேவி விழாவின் நோக்கத்தையும், துறையின் கல்விச் சாதனைகளையும் விளக்கினார். பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி முருகையா, மருத்துவ இயக்குனர் Dr. வெங்கடேசன், துறை தலைவர்களான Dr. கண்மணிதேவி (Nodal Officer), Dr. A. ராமசந்திரன் (Course coordinator) உள்ளிட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில், பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது மருத்துவ சேவை வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை அடைந்து, சமூகத்திற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க உறுதியேற்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...