கோவையில் பரிதாபம்..! லாரியில் சிக்கி ஊராட்சி அலுவலர் பலி

கோவை: கோவை, நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் அருகே லாரியை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஊராட்சி அதிகாரி, லாரி திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி லாரியின் பின் பகுதியில் மோதி, சக்கரத்தில் தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை, நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் அருகே லாரியை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஊராட்சி அதிகாரி, லாரி திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி லாரியின் பின் பகுதியில் மோதி, சக்கரத்தில் தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- போத்தனூர், நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் சாலையில் நேற்று காலை லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெ.ஜெ., நகர் பாலம் அருகே வரும்போது டிரைவர் 'பிரேக்' போட்டுள்ளார். தொடர்ந்து வந்த ஒரு பைக் லாரியின் பின்புறம் மோதியது. இதில், பைக்கில் வந்தவர் கீழே விழ, லாரியின் பின் சக்கரம் அந்நபரின் தலையில் ஏறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தால் சிறிது நேரம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விசாரணையில், இறந்தவர் கணியூரை சேர்ந்த சுரேஷ்குமார், 52 என்பதும் அவர் ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...