கோவை கிணத்துக்கடவு அருகே இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் கவலை!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் இரவு நேரங்களில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோதவாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு அறுவடைக்கு தயாராகி வருகிறது.



ஆனால், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, செடி அடியில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.



இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே காட்டுப் பன்றிகளால் மரவள்ளி கிழங்கு சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...