கோவை: தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பிரதான சாலையில் ஏராளமான தெரு வியாபாரிகள் உள்ளனர். தெரு வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.டி.கே தனபாண்டியன் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவை நகராட்சி மூலம் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தெரு வியாபாரிகளுடைய கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது தொற்று குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்பு வியாபாரம் செய்த இடங்களிலேயே வியாபாரிகளை முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி வணிகக் குழு தேர்தலை நடத்த வேண்டும், அனைவரும் வங்கிக் கடன் பெறவும், முறையாக திருப்பி செலுத்தவும் ஏற்பாடு செய்யும்படியும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்து வியாபார கட்டணம் வசூலிக்க வேண்டுகிறோம் உட்பட 9 கோரிக்கைகளை அடங்கிய மனுவினை நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் அவரிடம் வழங்கினார்.