தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு தெரு வியாபாரிகள் சங்கம் மனு!

கோவை: தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பிரதான சாலையில் ஏராளமான தெரு வியாபாரிகள் உள்ளனர். தெரு வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.டி.கே தனபாண்டியன் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவை நகராட்சி மூலம் முதலமை‌ச்ச‌ருக்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தெரு வியாபாரிகளுடைய கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது தொற்று குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்பு வியாபாரம் செய்த இடங்களிலேயே வியாபாரிகளை முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி வணிகக் குழு தேர்தலை நடத்த வேண்டும், அனைவரும் வங்கிக் கடன் பெறவும், முறையாக திருப்பி செலுத்தவும் ஏற்பாடு செய்யும்படியும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்து வியாபார கட்டணம் வசூலிக்க வேண்டுகிறோம் உட்பட 9 கோரிக்கைகளை அடங்கிய மனுவினை நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் அவரிடம் வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...