கோவை: வால்பாறையில் சாலைகளில் பாதுகாப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரை 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை சாலை உள்ளது. இந்த சாலைகளில் பாதுகாப்பு சுவர் அமைத்தல், சாலை விரிவாக்கம் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, சாலைகளில் பாதுகாப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகளின் இரு பகுதி ஓரங்களிலும் மத்தியிலும் ரப்பர் கலவையிலான வெள்ளை பெயிண்டில் கோடுகள் அடிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளை அடையாளம் காணும் வகையில் அங்கும் வெள்ளை பெயிண்ட்களால் கட்டம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இப்பணிக்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பணியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.