கோவை: கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை, கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கிராமங்களில் முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் அரசுப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதனையடுத்து, இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 400 பேருக்கு டோக்கன் வழங்கபட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும், இந்த தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.