கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொட்டு நீர் பாசனம் அமைப்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமாகும். 70 சதவீத பாசன நீரை சேமிப்பது, உடன் ரசாயன உரங்களை நீரில் கலந்து விடுவதால் 50 சதவீத சாகுபடி செலவு குறையும். சிறு குறு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள மானியத்தில் 100% மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.

இதேபோல், புதிய நுண்நீர் பாசன குழாய்கள் பதிக்க கரும்பு பயிரை தவிர இதர பயிர்களுக்கு பள்ளம் தோண்ட ரூபாய் 3000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற கடந்த ஆறு மாதத்தில் எடுக்கப்பட்ட சிட்டா, நில வரைபடம், புகைப்படங்கள் நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று ரேஷன் ஆதார் கார்டு கூட்டு வரைபடம் சிறு குறு விவசாயி சான்றுடன் தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், நடப்பாண்டு தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். நடப்பாண்டு தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 150 ஹெக்டேர் பரப்பளவில் திட்டம் செயல்படுத்திட ரூபாய் 104 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.