கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடுபவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை வாகன சோதனை நடத்திவருகின்றனர்.

வால்பாறையில் கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கி, மளிகை, காய்கறி மற்றும் நியாயவிலைக் கடைகள் பால் மருந்தகங்கள் என பல்வேறு கடைகள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் முருகையா மற்றும் காவல் துறையினர் இரவு ஒளி பிரதிபலிப்பு சட்டைகளை அணிந்து சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்து கொள்கின்றனர். தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இரவு 7 மணிக்கு மேல் அநாவசியமாக சாலையில் நடப்பவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.