கோவை அரசு மருத்துவமனையில் வாகனங்கள் திருட்டு: திருச்சி ஆசாமி கைது..!

கோவை: கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடியது. இதை சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் நான்கு சக்கர வாகனங்களை திருடி வந்தனர். வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சி ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடியது. இதை சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் நான்கு சக்கர வாகனங்களை திருடி வந்தனர். வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சி ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடியது. இங்கு கோவை உட்பட பல்வேறு அருகாமையிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற வருவதுண்டு. இதை சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள், தொடர்ந்து மோட்டார் சைக்கிள் நான்கு சக்கர வாகனங்களைத் திருடி வந்தனர். இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், இன்று போலீஸார் கோவை அரசு மருத்துவமனையில் கார் திருடிய திருச்சியைச் சேர்ந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் உறவினர் ஒருவரின் கார் திருட்டுப் போனதாக புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரேஸ் கோர்ஸ் போலீஸார் கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தியிருந்த மாருதி 800 காரை திருடிச் சென்ற நபரை கைது செய்தனர். பிடிபட்ட நபர் திருச்சி மாவட்டம் மனச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் ராஜா (எ) ஆரோக்கிய சகாய தர்மராஜ்(56) என்பது தெரிய வந்தது.



இவர் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகள் உள்ளது. மேலும், பிடிபட்டநபரிடமிருந்து இருசக்கர வாகனங்கள் 2 ராயல் என்ஃபீல்ட் புல்லட், இரண்டு கார்கள், 2 பேஷன் ப்ரோ ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....