கோவையில் மலைவாழ் கிராம மக்களுக்கு வகுப்புகள் நடத்திய சந்தியா... ‘கல்பனா சாவ்லா' விருதுக்கு பரிந்துரை..!

கோவை: கோவையில் மலைவாழ் கிராம மக்களுக்கு வகுப்புகள் நடத்திய சின்னாம்பதி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சந்தியா, ‘கல்பனா சாவ்லா' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் மலைவாழ் கிராம மக்களுக்கு வகுப்புகள் நடத்திய சின்னாம்பதி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சந்தியா, ‘கல்பனா சாவ்லா' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சந்தியா. கொரோனா கால ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்தப் பகுதி மாணவ, மாணவிகளுக்கு இணையதளம் ஆன்லைன் போன்ற வசதிகள் இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிராமத்திலேயே முதல் பட்டதாரியான இளம்பெண் சந்தியா, சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். பள்ளி செயல்படுவது போலவே, காலை 8 முதல் 12 மற்றும் மாலை 3 முதல் 6 மணி வரை சிறப்பு வகுப்புகளை எடுத்து வந்தார். இந்தநிலையில், இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் சந்தியா ‘கல்பனா சாவ்லா' விருது பெற பரிந்துரைக்கபடுவார் என தகவல் வந்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



இதில் மாவுத்தம்பதி ஊராட்சித் தலைவர் கோமதி செந்தில்குமார், சந்தியாவை நேரில் சந்தித்து பாடம் நடத்த தேவையான வசதிகளை செய்து தருவதாகத் தெரிவித்தார். தாம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தியா கூறுகையில், ‘‘இந்த அறிவிப்பு தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும், பழங்குடி கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ள குழந்தைகளும் ஆர்வமுடன் கல்வி கற்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....