கோவை: வால்பாறையில் அரசின் அறிவிப்பை மதிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தற்பொழுது கொரானா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அவர்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போன் செய்து தங்களுடைய உடல்நிலை பாதிப்பு பற்றி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மூத்த குடிமக்களின் தகவலின் பேரில் அவர்களுடைய உடல்நிலை பாதிப்புக்கு ஏற்றவாறு மருத்துவ அலுவலர்கள் மருந்துகளை வீட்டிலேயே வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் உள்ள சிறுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்த பொன் கணேஷ் என்பவரின் 92 வயது தாயார் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பொன் கணேஷ் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலரின் தொலைபேசி எண்ணுக்கு தகவலை தெரிவிக்க பலமுறை முயன்று உள்ளார்.

ஆனால், சம்மந்தப்பட்ட அலுவலர் பதில் அளிக்காததால் பொன் கணேஷ் அவருடைய தாயார் மற்றும் உறவினர்களுடன் சென்று அரசின் அறிவிப்பை மதிக்காத அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதம் செய்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் முருகையா அவர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .