கோவையில் 10-ம் வகுப்பில் அரசு வழங்கிய மதிப்பெண் குறைவாக இருந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில், பத்தாம் வகுப்பில் அரசு வழங்கிய மதிப்பெண் குறைவாக இருந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவையில் பத்தாம் வகுப்பில் அரசு வழங்கிய மதிப்பெண் குறைவாக இருந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம் பாளையம் ராமசாமி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (48), இவரது மகள் யாழினி (15). சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் செயல்படாமல் ஆன்லைன் வகுப்பின் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டது. இந்தாண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாததால் அனைவரும் பாஸ் செய்யப்பட்டு தற்போது மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் யாழினி சித்தாபுதூரில் உள்ள பள்ளிக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மதிப்பெண் மிகவும் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலையிலிருந்த யாழினிக்கு இது மன வருத்தத்தை உண்டாக்கியது. இதனால் பெற்றோரிடம் யாழினி அழுது புலம்பியுள்ளார். மற்றவர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்று கூறி அழுதுள்ளார். அவரது பெற்றோர்கள் யாழினியை சமாதானப்படுத்தினர்.

இதனையடுத்து, மன வருத்தத்தில் இருந்து வந்த யாழினி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாத்ரூமில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாத்ரூமிற்கு சென்று வெகு நேரமாகியும் யாழினி வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது யாழினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாழினியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பெண் குறைந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....