கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி வீடுகளில் பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதுகாப்புக்காக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி வீடுகளில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதுகாப்புக்காக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி வீடுகளில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் கொரோனா ஊரடங்கால் எல்லோரும் வீட்டிலேயே இருப்பதால், பொழுதுபோக்குக்காக வீடுகளில் சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக மாநகர காவல்துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தமோர் உத்தரவின்பேரில் காட்டூர் போலீஸார் காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக டவுன் ஹால் சங்கிலி துரை(28), செல்வபுரம் ராதாகிருஷ்ணன்(49), காந்திபுரம் சுப்பிரமணி(60), தெலுங்குபாளையம் கணேசன்(54), ஃபைவ் கார்னர் தினேஷ்(20), வி.கே.கே.மேனன் ரோடு ஜம்புலிங்கம்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட 11ஆயிரத்து 510 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைப்போல ரத்தினபுரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக ரத்தினபுரியைச் சேர்ந்த பாலசுந்தரம்(65), கோவில் மேடு அஜித்(46), திருநெல்வேலி ராஜ்குமார்(46), கெம்பட்டி காலனி துரைராஜ்(44), பாப்பநாயக்கன்பாளையம் ராஜ்குமார்(46), பள்ளிக்கூட வீதி ராம்மோகன்(54), திருப்பூர் இஸ்மாயில்(45), காந்திபுரம் சுப்பிரமணி(55), கணபதி பிரகாஷ்(41) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட 34 ஆயிரத்து 610 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...