பொள்ளாச்சி அருகே மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்கள் குட்டையில் கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு!

கோவை: மது விலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்களை பொள்ளாச்சி அருகே உள்ள புறம்போக்கு குட்டையில் கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.


கோவை: மது விலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்கள் பொள்ளாச்சி அருகே உள்ள புறம்போக்கு குட்டையில் கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

கோவை மற்றும் பொள்ளாச்சி அமலாக்கப்பிரிவு (மதுவிலக்கு) போலீசார் 2020ம் ஆண்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ய முற்பட்ட மதுபாட்டிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் காவல் நிலையங்களில் வைத்திருந்தனர். இதனை அழிக்க கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவிட்டார்.



இந்த நிலையில், இன்று போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2,577 மதுபாட்டில்களை பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரம் புறம்போக்கு நிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், கோட்ட கலால் அலுவலர் சந்திரா முன்னிலையில் குட்டை பகுதியில் கொட்டி அழித்தனர்.



இதனைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....