கோவை: கோவை மாவட்டத்தில் குறுசிறு தொழில் முனைவோர்களிடம் பணியாற்றும் தொழிலாளிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனடியாக தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எங்கள் TACT சங்கத்தின் சார்பில் கடந்த ஒரு மாதமாக மாவட்ட தொழில் மையத்தின் மூலம் எங்கள் குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சங்கத்தின் மூலம் முகாம் நடத்தி தடுப்பூசி போடக் கோரி வரும் சூழ்நிலையில் இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக, குறுந்தொழில் முனைவோர்களிடம் 2 பேர் முதல் 10 & 15 வரை பணி புரியும் தொழிலாளிகள் உள்ளனர். அரசு வழிகாட்டல் படி இவர்களுக்கு எங்கள் தொழில் அமைப்பு மூலம் உடனடியாக தடுப்பூசி போட்டு கொள்வதற்கான வாய்ப்பு தங்கள் வழங்கிட வேண்டுகிறேன். முதல் கட்டமாக இடையர்பாளையம், இருகூர், ஆவாரம் பாளையம் பகுதியில் முகாம் நடத்திட ஏற்பாடு செய்து உள்ளோம்.
எனவே, ஒவ்வொரு முகாமிலும் குறைந்தபட்சம் 700 தடுப்பூசிகள் உடனடியாக வழங்கி குறுந்தொழில் முனைவோர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு தங்கள் உதவிட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.