கோவை: கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவையிலும் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
கோவை: கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவையிலும் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
கோவை மாநகராட்சியில் 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து கிழக்கு மண்டலம் 2, மேற்கு மண்டலம் 12, தெற்கு மண்டலம் 8, வடக்கு மண்டலம் 10, மத்திய மண்டலம் 8, என மொத்தம் 40 நபர்கள் மாநகராட்சியின் கோவிட் இணையதளத்தில் விவரங்களைத் தெரியப்படுத்தியுள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.