வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம் மக்கள் அச்சம்..!

கோவை: வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் வசிப்பவர் பெரியசாமி வயது 66 இவர் முடீஸ் எஸ்டேட் பங்களாவில் தோட்ட வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இவர், இன்று அந்த பங்களாவிற்கு பணிக்கு சென்று பங்களா பகுதியில் பணியில் இருந்தபோது காலை திடீரென அங்கு வந்த ஒருகரடி முதியவரை தாக்கியுள்ளது. இதில் இவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு அலறியுள்ளார். உடனே, அந்த கரடி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து அருகே உள்ள தேயிலை காட்டிற்குள் ஓடியுள்ளது.



இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் கரடி தாக்கி காயமடைந்தவரை முடீஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் முன்னிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் கரடி தாக்கியதில் பெரியசாமியின் இடது கையில் சுமார் 20 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கிய ராஜ் சேவியர் உத்தரவிற்கிணங்க கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...