பொள்ளாச்சி அருகே மாட்டுச் சந்தையைத் திறக்க அனுமதி கோரி வியாபாரிகள் மனு..!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி மாட்டுச் சந்தையைத் திறக்க அனுமதி வழங்கக் கோரி வியாபாரிகள் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி மாட்டுச் சந்தையைத் திறக்க அனுமதி வழங்கக் கோரி வியாபாரிகள் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் செயல்பட்டு வரும் திப்பம்பட்டி மாட்டுச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். இதை நம்பி அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாட்டுச் சந்தைகள் மூடப்படடுள்ளததால், இத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



தற்போது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், மாடுகள் விற்பனை நடைபெற்றது. அப்போது, மாட்டுச் சந்தையைத் திறக்கக் கூடாது என அதிகாரிகள் அபராதம் விதிப்பதாகக் கூறி, திப்பம்பட்டியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணியிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில், ‘‘திப்பம்பட்டி மாட்டுச் சந்தையை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தைப் பெற்று வரும் நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இரண்டு மாதங்களாக, மாட்டுச்சந்தை மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மாட்டுச் சந்தையைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்'' என்று மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....