வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளதா என வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு!

கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளதா என்று வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.


கோவை: வால்பாறையில் கொரோனா நிவாரண பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளதா என்று வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இதில் முதல் தவணையாக 2000 ரூபாயும் மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் பணமும், 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியிலும் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 17,636 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.



இந்த நிலையில், இவர்களுக்கு முறையான சரியான முறையில் கொரோனா நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்களும் மேலும் ரேஷன் கடைகளில் சரியாக பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறதா என்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் சரியான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்று வால்பாறை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.



குறிப்பாக, சோலையார், தாய்முடி, நல்லமுடி, முத்து முடி போன்ற எஸ்டேட் ரேஷன் கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். மக்களுக்கு சரியான முறையில் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...