வால்பாறை சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்..!

கோவை: வால்பாறையின் பிரதான சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுவதோடு, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: வால்பாறையின் பிரதான சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுவதோடு, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பிரதான சாலை ஒன்று உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களும் பொதுமக்களும் பயணிக்கின்றனர். இந்தநிலையில், வால்பாறையில் ஒரு சிலரால் வளர்க்கப்படும் ஆடுகள், பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் வால்பாறையின் பிரதான சாலையிலேயே வலம் வருகின்றன. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை பழைய பேருந்து நிலையம் வரை சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இப்படி கேட்பாரற்று சுற்றித் திரியும் கால்நடைகள் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்ட வந்து அச்சுறுத்துகின்றன.

மேலும் வாகனங்களுக்கு முன் குறுக்கும் நெடுக்குமாக சென்று போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வால்பாறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...