சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற போலீஸ் அதிகாரியை தாக்கிய ரவுடி... போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்

கோவை: சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரி மீது போதை ஆசாமி சாக்கடை கழிவு நீரை அள்ளி வீசி, ஆபாசமாக வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது.


கோவை: சங்கரன்கோவிலில் விசாரணைக்குச் சென்ற காவல் அதிகாரி மீது போதை ஆசாமி சாக்கடை கழிவு நீரை அள்ளி வீசி, ஆபாசமாக வசைபாடிய சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் மது அருந்திவிட்டு அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரியான பாலகிருஷ்ணன் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதன்போது மதுபோதையில் இருந்த அசோகன், காவல் அதிகாரியை ஆபாசமாகத் திட்டி தீர்த்துள்ளான்.

மேலும், அவனை காவல்துறை அதிகாரி ஆபாசமாக பேசாதே என்று எச்சரிக்கை செய்யவே, பதிலுக்கு அவன் சாக்கடையை அள்ளி வீசி அசிங்கப்படுத்தி இருக்கிறான். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதனை வேடிக்கை பார்த்த நிலையில், போதை தலைக்கேறிய கொடூரன் காவல் அதிகாரியை ஆபாசமாக பேசி தகராறு செய்து, அவரது வாகனத்தின் தலைக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளான்.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆன நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அசோகனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...