கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாவட்டத்தில் தினசரி மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.

பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றன.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ள 717 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க அமைக்கப்பட்ட ஜீரோ டிலே வார்டில் உள்ள 15 படுக்கைகளும் நிரம்பி உள்ளதால், கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 2 பேருந்துகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட வைரஸ் தொற்று பாதித்து மூச்சுத் திணறலுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.



நோயாளிகள் காத்திருப்பை தவிர்க்க மருத்துவமனைக்கு, அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 138 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கொரானா சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.



விரைவில் அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து, மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....