பொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!

கோவை: கொரோனா தொற்றால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொரோனா தொற்றால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியன்(65). இவர் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்றி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நோய் தொற்றால் உயிரிழந்த தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....