கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் தனி வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் தனி வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3000 மேல் பதிவாகி வருகிறது. இதில் லேசான தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வருவோர், மருத்துவமனைகளில் அவசியம் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வீடுகளில் இருந்தே உரிய மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மட்டும் 11,000 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை தனி வாகனங்கள் மூலமாக சேகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சி சார்பில் மண்டலம் ஒன்றுக்கு ஒரு வாகனம் வீதம் 5 மண்டலங்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் சேகரிக்க தனியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் 15 முதல் 20 கிலோ வரை மருத்துவ கழிவுகள் தினமும் சேகரமாகின்றன. தனி வாகனங்களில் சேகரிக்கப்படும் இக்கழிவுகள், குப்பையை கையாளும் கழிவு மேலாண்மை பிரிவு வசம் சேர்க்கப்படுகிறது.
அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளில் சேகரமாகும் குப்பையும் தனியாக சேகரிக்கப்படுகின்றன. இக்குப்பை வெள்ளலூரர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன," என்றார்.