வால்பாறை நகரைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்..!

கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடியது.


கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் வருவாய் துறையினர் நகராட்சி மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மளிகை காய்கறி இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வால்பாறை நகரில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், வால்பாறை வட்டாட்சியர் ராஜா உத்தரவின் பேரில் வால்பாறை நகரைச் சுற்றியுள்ள சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேவையின்றி சுற்றுபவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதன் காரணமாக வால்பாறை நகரில் கூட்டம் சேர்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....