கோவையில் ஸ்டேட் பேங்கை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற நபர் கைது!

கோவை: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்கை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்கு கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை வரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் வங்கி உள்ளது. கடந்த 11ம் தேதி அதிகாலை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். அலாரம் அடித்ததை தொடர்ந்து தப்பி ஓடினார்.

தொடர்ந்து கோவை வரைட்டி ஹால் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதில் கோவை மாநகர துணை ஆணையர் குற்றப்பிரிவு உமா உத்தரவின் பேரில், உதவி ஆணையர் மேற்கு குற்றப்பிரிவு நவராஜ் ராஜ்குமார் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில், தலைமை காவலர்களும் உமா, கார்த்திக், பூபதி, சித்தன் - மற்றும் காவலர்கள் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குர்ராணி பகுதியில் வசிக்கக்கூடிய அமீஸ் பிஸ்வால் என்பவர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...