வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு, அங்கு மையம் அமைக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை: வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளலூர்–போத்தனூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
வெள்ளலூர் பேரூராட்சியில் கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மாநகரின் 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைக்கிடங்கால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளலூர் பேச்சியம்மன் கோயில் அருகே கப்பினிய கவுண்டர் வீதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் அங்கு கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குப்பைக்கிடங்கால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே மேலும் ஒரு குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவது ஏற்க முடியாதது எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வெள்ளலூர்–போத்தனூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது, அப்பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படாது என்றும், தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகள் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக வெள்ளலூர்–போத்தனூர் சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.