கோவையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

இந்நிலையில், கோவை சங்கனூர் பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு கோவை நகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.



குறிப்பாக, இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மற்றும் கார்களில் உலா வந்த நபரை மடக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் அவருடன் பின்னால் அமர்ந்து அந்த நபர்களை அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பலர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், வலுக்கட்டாயமாக அமர வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு இ-பதிவு முறையில் பொதுமக்கள் வருகின்றன. எனவே, இதனை கருத்தில் கொண்டு கோவை சூலூரில் வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆதார் எண் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு செல்போன் எண் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், விதிமுறையை மீறியவர்கள், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...