செய்தியாளர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை..! அடையாள அட்டை போதும் - காவல்துறை அறிவிப்பு!

கோவை: செய்தியாளர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் அடையாள அட்டை போதும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: செய்தியாளர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் அடையாள அட்டை போதும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் காவல்துறையினர் தடுப்பதாக புகார்கள் எழுந்தன.

முன்களப் பணியாளர்களாக பத்திரிகையாளர்களிடம் இ-பதிவு கேட்டு, அவர்களின் வாகனங்களை நிறுத்தி போலீசார் வாக்குவாதம் செய்வதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் குற்றம்சாட்டியது. இவ்விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

ஊடகவியலாளர்கள் தங்களது அடையாள அட்டையை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அடையாள அட்டை, ஊடகவியலாளர் அங்கீகார அட்டை, பத்திரிகையாளர் மன்ற அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் மாநிலம் முழுவதும் பயணிக்கலாம். இனி பத்திரிகையாளர்களிடம் இ-பதிவு கேட்கப்படாது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவர்கள், சுகாதார துறையினர், பத்திரிகை ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய மாநில அரசு பணியாளர்கள், தலைமை செயலக அலுவலகர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது இ-பதிவு தேவையில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...