கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது - 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவை அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்த போலீசார் அவரிடம் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்த போலீசார் அவரிடம் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் மயானம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்க்கும்போது வீரகேரளத்தை சேர்ந்த சக்திவேல் (50), கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அப்போது, சக்திவேலை சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...