ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..!

பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.


பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை. இந்த அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 16/05/2021 முதல் 15/10/2021 வரை 153 நாட்களுக்கு ஆயிரத்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பின் போது செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, ஆழியாறு அணை உதவி பொறியாளர் மாணிக்கவேல் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...