வால்பாறையில் கனமழையால் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து வீடு சேதம்..!

வால்பாறை: கோவை வால்பாறையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வால்பாறையில் உள்ள வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து வீடு சேதமடைந்துள்ளது.


வால்பாறை: கோவை வால்பாறையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வால்பாறையில் உள்ள வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து வீடு சேதமடைந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக தவ் தே புயல் காரணமாக சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வால்பாறை சோலையார் அக்கா மலை நல்லகாத்து வாட்டர்பால்ஸ் கவர்கள் குரங்கு முடி சிறுகுன்றா சின்கோனா போன்ற எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆங்காங்கே மின்கம்பத்தின் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டது.



இன்று மதியம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் சிவகுமார் லட்சுமணன் என்பவரின் வீட்டு பின் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் பின்புற சமையல் அறையின் பாத்ரூம் பகுதியில் இடிந்து விழுந்ததில் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதில் யாருக்கும் உயிருக்கு பாதிப்பு இல்லை. அண்ணா நகர் பகுதிகளில் அடுக்கடுக்காக வீடுகள் உள்ளதால், இடியும் நிலையில் உள்ள தடுப்பு சுவர்களை, அரசு அதிகாரிகள் கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



வால்பாறை பகுதியில் 114.மில்லி மீட்டரும், சோலையார் அணை 170மில்லி மீட்டரும், நீரார் அணை 127.மில்லி மீட்டரும் சின்னகள்ளார் 91 மில்லி மீட்டரும் மழை அளவாக பதிவாகியது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...