கோவை: கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவர், செவிலியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கோவை: கோவை தங்க நகை வியாபரிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவர், செவிலியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை ஜூவல்லர்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. அப்போது, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், ‘‘மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நகர்நல அலுவலகம் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் சங்கங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு நாட்களில் மொத்தம் 466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில், தடுப்பூசி முகாம் முடிவில் அவர்களுக்கு வெள்ளி நாணயம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.'' என்றார்.