அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்..!

கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் தொடர்ந்து இரண்டு தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் தொடர்ந்து இரண்டு தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, காய்கறி உள்ளிட்டவற்றை கொண்டு சென்று தரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே 80 ஆவது வார்டில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர் பிரியா கிருஷ்ணன் என்பவர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். இதேபோல், 81 ஆவது வார்டில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பது, சக பணியாளர்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அண்ணல் அம்பேத்கர் பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்நாடு செல்வம்,

‘‘கொரோனா நோய்த்தடுப்பு களப்பணிகளில் மாநகர சுகாதார பிரிவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றிய போதும், இரண்டு தூய்மைப் பணியாளர்கள் கொரோனாவால் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இருவரின் இறப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகமும் சுகாதார துறையும் ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அனைவரின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். மேலும், மாநகரில் உரிய பாதுகாப்பின்றி பணியாற்றும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சோப்பு திரவம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...