பொள்ளாச்சியில் நள்ளிரவில் சேதமடைந்த மலைவாழ் மக்கள் குடிசைகள்... அச்சத்தில் கிராம மக்கள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் மலைவாழ் மக்களின் குடிசைகள் சேதமடைந்தன. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் மலைவாழ் மக்களின் குடிசைகள் சேதமடைந்தன. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.

இதில் ஆழியாறு அருகே 34 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில், நள்ளிரவில் வீசிய பலத்த காற்றில் சுமார் ஏழு குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இரவு நேரம் என்பதால், அந்தக் குடிசையில் இருந்த மக்கள் போக வழி தெரியாமல் பாறைகளில் தஞ்சமடைந்தனர்.



பின்னர், தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் சேதமடைந்துள்ள குடிசைகளை அப்புறப்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாக தங்க ஆழியார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.



மேலும், பொள்ளாச்சி வன சரகத்தில் உள்ள அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அருகில் தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...